V4UMEDIA
HomeNewsBollywoodஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் மலையாளத்தின் மெகாஹிட் திரைப்படம் !

ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் மலையாளத்தின் மெகாஹிட் திரைப்படம் !

மலையாளத்தில் குஞ்சக்கோ போபன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற க்ரைம் திரில்லர் ‘அஞ்சாம் பதிரா’ படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது.

ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட், ஆஷிக் உஸ்மான் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஏபி இன்டர்நேஷனல் நிறுவனங்கள் இணைந்து “அஞ்சாம் பதிரா” படத்தின் ஹிந்தி ரீமேக்கிற்காக கைகோர்த்துள்ளன.

Image

குஞ்சக்கோ போபன் நடிப்பில் மிஷுன் மானுவல் தாமஸ் எழுதி இயக்கிய ‘அஞ்சாம் பதிரா’ படம் இந்த வருடத்தின் சிறந்த க்ரைம் த்ரில்லர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் அதிக வசூல் பெற்றது. லாக் டவுன் சமயத்தில் அனைவராலும் OTT இல் ரசித்து பார்க்கப்பட்டது.

இப்படத்தில் குஞ்சாக்கோ போபன், ஷரஃப் யு தீன், உன்னிமயா பிரசாத், ஜினு ஜோசப் மற்றும் ஸ்ரீநாத் பாசி ஆகியோர் நடித்திருந்தனர்.

ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷிபாசிஷ் சர்க்கார் கூறுகையில், “உங்களை சீட் நுனியில் உட்கார வைக்கும் கிரைம் த்ரில்லர்களில்’ அஞ்சாம் பதிரா படமும் ஒன்று ! இப்படத்தை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்காக ரீமேக் செய்வதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம் ! ” என தெரிவித்துள்ளார்.

Most Popular

Recent Comments