V4UMEDIA
HomeNewsKollywoodதனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்ற நயன்தாரா !

தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்ற நயன்தாரா !

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் கணவன் மனைவி போலவே வெளிநாடுகள் உட்பட பல இடங்களுக்கு ஷூட்டிங் இல்லாத ஓய்வு நேரத்தில் ஒன்றாக சென்று வருகிறார்கள். விரைவில் இவர்களது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது.

Image

இந்நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் தனி விமானத்தில் கொச்சி சென்றுள்ளனர். கேரளாவில் ஓணம் பண்டிகை இன்று மிக விமர்சையாக கொண்டாடப்படுவதை அடுத்து ஓணம் பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாட நயன்தாரா கொச்சி சென்றுள்ளார் என்றும், அவருடன் இயக்குனர் விக்னேஷ் சிவனும் சென்றுள்ளார் என கூறப்படுகிறது.

Most Popular

Recent Comments