தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குநர் பா.ரஞ்சித். 2012ம் ஆண்டு தினேஷ் நடிப்பில் வெளிவந்த “அட்டகத்தி” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பின் கார்த்தி நடிப்பில் “மெட்ராஸ்”, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் “கபாலி”, “காலா” என பல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குனராக மட்டுமின்றி கதையாசிரியர், தயாரிப்பாளர் என பன்முக கலைஞராவார். நீலம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல தரமான திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.
நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மூலம் 2018ல் “பரியேறும் பெருமாள்” மற்றும் 2019ல் “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” போன்ற திரைப்படங்களை பா.ரஞ்சித் அவர்கள் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் “அற்புதமான அறிவிப்பு! நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அடுத்த திரைப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை இன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்படும்” என கூறியுள்ளார்.