தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு. இவரது கால்ஷீட்டை வாங்குவது தான் இன்றைக்கு மிகவும் கடினம். தான் கஷ்டப்பட்டு உழைத்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசத்துக்கு கூட போக நேரம் இல்லாமல் பிஸியாக நடித்து கொண்டிருப்பார். தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் யோகிபாபு, மஞ்சுபார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் யோகி பாபு தமிழ் , தெலுங்கு , இந்தி என பல மொழிகளில் நடித்ததை அடுத்து தற்போது கன்னட மொழி படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் யோகி பாபு கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், துனியா விஜய் ஆகியோரையும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி மிக வைரலாகி வருகிறது. கூடிய விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாரக்கலாம். ம்