V4UMEDIA
HomeNewsHollywoodஅதிக லைக் பெற்ற பிளாக் பாந்தர் ஹீரோவின் ட்விட்டர் பதிவு !

அதிக லைக் பெற்ற பிளாக் பாந்தர் ஹீரோவின் ட்விட்டர் பதிவு !

பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்ற நடிகர் சாட்ஸ்விக் போஸ்மேன் புற்றுநோய் காரணமாக நேற்று (ஆகஸ்ட் 30) மரணமடைந்தார்.

மார்வெல்லின் கேப்டன் அமெரிக்கா, சிவில் வார் போன்ற திரைப்படங்களில் பிளாக் பேந்தராக நடித்தவர் நடிகர் சாட்ஸ்விக் போஸ்மேன். அந்த கதாபாத்திரம் மிகப்பெரிய வெற்றி அடையவே பிளாக் பேந்தர் கதாபாத்திரத்துக்காகவே தனியாக ஒரு முழுநீள படம் உருவானது. அதிலும் போஸ்மேனே ஹீரோவாக நடித்தார். அந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. குழந்தைகள், இளைஞர்கள் என இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனால் போஸ்மேனுக்கு உலகளவில் பெரும் புகழ் கிடைத்தது.


Marvel Studios' BLACK PANTHER..T'Challa/Black Panther (Chadwick Boseman)..Photo: Matt Kennedy..©Marvel Studios 2018

பெருங்குடல் புற்றுநோய் காரணமாக அவர் நேற்று உயிரிழந்துள்ளார். அவருக்கு புற்றுநோய் இருந்ததை வெளி உலகுக்கு அறிவிக்காமலே இருந்த அவர் படங்களில் நடித்துக் கொண்டே சிகிச்சை எடுத்து வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் இன்று மறைந்தார். இந்த செய்தி உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BLACK PANTHER, Chadwick Boseman, 2018. © Marvel / © Walt Disney Studios Motion Pictures /Courtesy Everett Collection


உலகம் முழுவதும் உள்ள மக்கள் அவருக்கு சோசியல் மீடியாக்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்தனர். ட்விட்டரில் அவரது அக்கவுண்ட்டில் இருந்து வெளியான பதிவை 62 லட்சதிற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இதுதான் ட்விட்டரில் அதிகம் லைக் பெற்ற பதிவு என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

pic.twitter.com/aZ2JzDf5ai— Chadwick Boseman (@chadwickboseman) August 29, 2020

Most Popular

Recent Comments