தமிழ்த் திரைத்துறையில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜி.வி பிரகாஷ்குமார். தற்போது படங்களில் கதாநாயகனாகவும் பிஸியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான அசுரன், சூரரைப் போற்று, ஜெயில் ஆகிய படங்களின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஜிவி கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இருப்பினும் தற்போது வரை அந்தக் குழந்தையின் புகைப்படங்களைப் பகிராத ஜிவி தற்போது குழந்தையின் புகைப்படங்களை ஆனந்த விகடன் சினிமா இதழில் பிரத்யோகமாக பகிர்ந்துள்ளார்.

மேலும் ஒரு தந்தையாக அவர் அளித்த பேட்டியில் தன் மகளை மிகவும் சுதந்திரமாகவும், தைரியமானவளாகவும், அவளுடைய தனித்துவத்தை அறிந்தும் வளர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலுத் தன் மகளின் பெயரான அன்வி என்னும் குஜராத்திய சொல்லிற்கு, “சூரியனிடமிருந்து வெளிவரும் முதல் கதிர்” என்று அர்த்தம் என்றும் கூறியுள்ளார். தற்போது வெளியாகி உள்ள ஜிவியின் குடும்பப் புகைப்படத்தை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.