கொரோனா வைரஸ் தாக்கத்தினால் திரையரங்கு, மால்கள் என அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருப்பதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
படப்பிடிப்பு, போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் என அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் (OTT) ஓடிடி ப்ளாட்பாரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டன.
இந்த நிலையில் “நான் ஈ” படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நானியின் 25வது படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நானி நடிப்பில் தற்போது ‘வி’ என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. மோகன் கிருஷ்ணா இயக்கத்தில் நானியுடன் சுதீர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ், ஜகபதி பாபு, வெண்ணிலா கிஷோர், நாசர் என பலர் நடித்துள்ளனர். இதில் நானி முதன்முறையாக வில்லனாக நடித்திருக்கிறார். “வி” திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி அமேசான் ப்ரைமில் ரிலீசாகிறது.
தற்போது ‘வி’ திரைப்படத்தின் முதல் பாடலாக ‘வாஸ்துன்னா வச்சேஸ்துன்னா’ பாடல் இன்று வெளியாகி இருக்கிறது. ஸ்ரீவென்னல்லா சீதாராம சாஸ்திரி வரிகளில், ஸ்ரேயா கோஷல், அமித் த்ரிவேதி, அனுராக் குல்கர்னி ஆகியோரின் குரல்களில் அமேசான் பிரைம் வீடியோவின் யூடியூப் சேனலில் இந்தப் பாடல் வெளியாகி இருக்கிறது.