விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மொத்தம் 17 பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மலேசியாவை சேர்ந்த முகன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அதன்பின் பட வாய்ப்புகள் ஏதும் இன்றி இருந்தார்.
இந்நிலையில் ‘வெப்பம்’ பட இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கும் புதிய படத்தில் முகின் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முகினுக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் பேச்சுலர் படத்தில் நாயகியாக நடித்த திவ்ய பாரதி நடிக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் முக்கிய ரோலில் நடிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.