V4UMEDIA
HomeNewsKollywood200 நாடுகளில் வெளியாகும் சூர்யாவின் "சூரரைப் போற்று" !

200 நாடுகளில் வெளியாகும் சூர்யாவின் “சூரரைப் போற்று” !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது “சூரரை போற்று”. இப்படத்தை சுதா கோங்குரா இயக்கியுள்ளார். சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரிப் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். 2டி என்டேர்டைன்மெண்ட் சார்பில் ராஜசேகர பாண்டியன் தயாரித்துள்ளார். இப்படத்தின் டீஸர் மற்றும் டிரைலர் ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது இப்படத்தை அமேசான் பிரைமில் வரும் அக்டோபர் 30 ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்தது.

Soorarai Pottru: A piece of the sun- The New Indian Express

மேலும் திரையரங்க உரிமையாளர்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு எழுந்தது. நேற்று இயக்குனர் பாரதிராஜா, சூர்யாவின் இந்த முடிவை வரவேற்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் சூரரை போற்று படம் அக்டோபர் மாதம் அமேசான் பிரைமில் 200 நாடுகளில் வெளியாக உள்ளது. இதை சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

Most Popular

Recent Comments