V4UMEDIA
HomeNewsKollywoodஓடிடியில் ரிலீஸாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படம் 'பூமிகா' !

ஓடிடியில் ரிலீஸாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படம் ‘பூமிகா’ !

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் திரையரங்கு, மால்கள் என அனைத்தும் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருப்பதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழில் முதல் படமாக நடிகை ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் மே 29-ஆம் தேதி மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெண்குயின் திரைப்படம் அமேசானில் ஜூன் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து பல படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆனது. சூர்யாவின் சூரரை போற்று படத்தை அமேசான் ப்ரைமில் அக்டோபர் 30 ரிலீஸ் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.


இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 25வது திரைப்படமான ‘பூமிகா’ என்ற திரைப்படமும் ஓடிடியில்
ரிலீசாக பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. இந்த படத்தின் தயாரிப்பு செலவு ரூபாய் 5 கோடி என்ற நிலையில் 12 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாகவும், இந்த படத்தின் கண்டெண்ட் புதுமையாக இருந்ததால் இந்த படத்திற்கு இவ்வளவு பெரிய தொகை கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா போன்ற நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments