ஊரடங்கு நேரத்தில் சினிமா பிரபலங்கள் அனைவரும் அவர்களது வீட்டில் குடும்பத்தினருடன் நேரத்தை அதிகமாக செலவழித்து வருகிறார்கள். சினிமா பிரபலங்கள் பலர் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடுகின்றனர்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் அருண் விஜய். தடம், செக்க சிவந்த வானம் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் இன்று நடிகர் அருண் விஜய் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் தன் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ‘பாசிட்டிவ் வைப்ஸ் ஒன்லி’, ‘கீப் மூவிங்’ என்ற ஹேஷ்டேகின் மூலம் “செல்வது கடுமையானதாக இருக்கும்போது, கடுமையானதும் செல்லும். புது லுக்!!” என்று குறிப்பிட்டு ரசிகர்களை உற்ச்சாகப்படுத்தியுள்ளார்.
இதை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் ஹாலிவுட் படமான எக்ஸ்-மேன் திரைப்படத்தில் ஹூக் ஜாக்மன் அவர்களின் தோற்றம் போல் உள்ளது என்றும் அடுத்த படத்திற்கான தோற்றமாகவும் இருக்கலாம் என தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.























