2017ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் உருவான வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரைசா. இந்தப் படத்தில் கஜோலின் உதவியாளராக நடித்திருப்பார். பிறகு பிக்பாஸில் பங்கேற்றதன் மூலமாக மிக பிரபலமானார்.
அதன் பின் ஹரிஷ் கல்யாண் உடன் ‘பியார் பிரேம காதல்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தப் படத்திற்காகச் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதற்கு பின் ரைசா நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. 2019ம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் உடன் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் கேமியோ வேடத்தில் நடித்திருந்தார். தற்போது `காதலிக்க நேரமில்லை, எஃப்.ஐ.ஆர்’ ஆகிய இரண்டு படங்களில் ரைசா நடித்துள்ளார்.
ந்நிலையில் ‘ரைசா’ அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை கார்த்திக் ராஜூ இயக்க சாம் கரன் ல் இசையமைக்கிறார். இந்தப் படத்தை கார்த்திக் ராஜூவின் முந்தைய படமான ‘சூர்ப்பனகை’ படத்தைத் தயாரிக்கும் ஆப்பிள் ட்ரீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரைசா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.