V4UMEDIA
HomeNewsKollywoodஉங்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதில் தான் மகிழ்ச்சி ! சூர்யாவிற்கு கடிதம் எழுதிய இயக்குனர் ஹரி...

உங்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதில் தான் மகிழ்ச்சி ! சூர்யாவிற்கு கடிதம் எழுதிய இயக்குனர் ஹரி !

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘சூரரை போற்று’ . நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட் ஆபீஸராக நடித்துள்ளார். சூர்யாவிற்கு ஜோடியாக முதன்முறையாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் என பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

சூரரைப் போற்று படம் அமேசான் பிரைம் OTT தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. சூர்யாவின் இந்த முடிவு தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களை மிகுந்த கோபமடைய செய்துள்ளது.

Director Hari talks about his next film with Suriya

தற்போது சூரரைப் போற்று ஓடிடி ரிலீஸ் குறித்து இயக்குனர் ஹரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “மதிப்பிற்குரிய திரு.சூர்யா அவர்களுக்கு உங்களுடன் சேர்ந்து தொடர்ந்து வேலை செய்த உரிமையில் சில விஷயங்கள் :

ஒரு ரசிகனாக உங்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி . OTT- யில் அல்ல. நாம் சேர்ந்து செய்த படங்களுக்கு , தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கை தட்டல்களால் தான், நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம் . அதை மறந்து விட வேண்டாம் . சினிமா எனும் தொழில் நமக்கு தெய்வம் .. தெய்வம் எங்கு வேண்டுமென்றாலும் இருக்கலாம், ஆனால் தியேட்டர் என்கிற கோவிலில் இருந்தால் தான் அதற்கு மரியாதை. படைப்பாளிகளின் கற்பனைக்கும், உழைப்புக்கும் ஒரு அங்கீகாரம். தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான் . இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால் , சினிமா இருக்கும் வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்து நிற்கும்.” என தெரிவித்துள்ளார்.

Most Popular

Recent Comments