V4UMEDIA
HomeNewsKollywoodஇந்த வருடம் தவிர்த்து விடுங்கள் ! ரசிகர்களுக்கு ஜெயம் ரவி வேண்டுகோள் !

இந்த வருடம் தவிர்த்து விடுங்கள் ! ரசிகர்களுக்கு ஜெயம் ரவி வேண்டுகோள் !

நடிகர் ஜெயம் ரவி வரும் செப்டம்பர் 10ம் தேதி தனது பிறந்தநாளை ரசிகர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் என அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ” இன்னும் ஒரு சில நாட்களில் வரப்போகும் எனது பிறந்தநாளை தாங்கள் அனைவரும் எதிர்நோக்கி இருப்பதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். உங்கள் அன்பு ஒன்று மட்டுமே ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாளைச் சிறப்படையச் செய்கிறது.

ஆனால் இந்த வருடம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நான் உங்களை விரும்பிக் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான். பிறந்தநாள் கொண்டாட்டங்களையும் கூட்டமாய்ச் சேர்வதையும் தவிர்த்து விடுங்கள். நம்மையும் நம்மை சுற்றி உள்ளவர்களின் பாதுகாப்பிற்காகவும் தான் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

கொண்டாட்டங்களுக்குப் பதிலாக நான் எப்படி உதவி தேவைப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறேனோ அப்படி நீங்களும் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்து என்மேல் கொண்ட அன்பை வெளிப்படுத்தும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் சேர்ந்து இந்த வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவோம்” என கூறியுள்ளார்.

Image
Image

Most Popular

Recent Comments