லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ள தளபதி விஜய், அடுத்ததாக தனது 65-வது படத்தில் ஏ.ஆர். முருகதாசுடன் இணைய உள்ளதாகவும் ,சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகிறது .இப்படம் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டியில் பேசியுள்ளார். அதில், “நீங்க மீண்டும் விஜய் சாருடன் படம் பண்றது உண்மையா?, அது துப்பாக்கி 2ம் பாகமா?” என்ற கேள்விக்கு ஏ.ஆர்.முருகதாஸ் பதிலளித்துள்ளார் :
“எந்தப் படத்தின் தொடர்ச்சியாகவும் இல்லாமல், ஓப்பனாக புதிய கதையாக இருந்தால் நல்லா இருக்கும் என்பது என்னோட கருத்து.
ஒரு படத்தின் தொடர்ச்சி என்பது மீண்டும் ஒரு வட்டத்துக்குள் போட்டு அடைப்பது போல் தான் இருக்கும். அதைத் தாண்டி ஒன்றை யோசிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணமாக இருக்கும்.
இளைய தளபதி இனி அவர் இல்லை, அவர் தளபதி விஜய் ஆகி 5 வருடம் ஆகிவிட்டது. சமூக வலைதளங்களில், துப்பாக்கி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் எனக்கு தலைப்பு கொடுக்கவில்லை என்று வருவது எல்லாம் பொய். அதில் எதுவும் உண்மையில்லை. இதனால் படத்தில் சிக்கல் என்பதெல்லாம் இல்லை. அது எந்த மாதிரியான படம் என்பது குறித்து தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து முறையான அறிவிப்பு வந்தால் தான் சரியாக இருக்கும்” என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.