V4UMEDIA
HomeNewsKollywoodபிரபல மலையாள இயக்குனருடன் இணையும் அர்ஜுன் தாஸ் !

பிரபல மலையாள இயக்குனருடன் இணையும் அர்ஜுன் தாஸ் !

அர்ஜுன் தாஸ் கைதி படம் தமிழ் சினிமாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். கைதி திரைப்படத்தில் கம்பீரமான குரலில் பேசும் அவரது குரலுக்காகவே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். தற்போது இவர் வளர்ந்து வரும் முன்னணி ஹீரோவாக உருவெடுத்து வருகிறார். இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

தற்போது தளபதி விஜய் யின் “மாஸ்டர்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இயக்குனர் அட்லீ தயாரிப்பில் “அந்தகாரம்” என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தை வி.விக்நராஜன் என்பவர் இயக்குகிறார்.

Image

தற்போது அர்ஜுன் தாஸ் பிரபல மலையாள இயக்குனர் தமிழில் இயக்கவிருக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பகத் ஃபாசில் நடித்த ட்ரான்ஸ் என்ற படத்தை அன்வர் ரஷித் இயக்கியிருந்தார். தற்போது இவர் தமிழில் இயக்கவிருக்கும் படத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

Recent Comments