எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் “லாபம்” . நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி உடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் கலையரசன் சாய் தன்ஷிகா உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தை 7சி எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் விஜய்சேதுபதி புரோடக்ஷனும் இணைந்து தயாரிக்கின்றன. இமான் இசை அமைத்துள்ள இப்படத்தில் ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.லாபம் படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் லாபம் படத்தின் முதல் ட்ரைலர் பற்றிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்தனர். கிராமத்தில் இருக்கும் ஒரு சாதாரண விவசாயி போர்க்கொடி தூக்கினால் மும்பை, லண்டன், அமெரிக்கா உள்பட உலக மார்க்கெட் எப்படி திண்டாடும் என்பதை தனது பாணியில் வித்தியாசமாக கூறியுள்ளார்.
இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு ஆகிய படங்களை இயக்கிய எஸ்பி ஜனநாதன் வழக்கம் போல் புரட்சிகரமான கருத்துக்கள் கொண்ட இந்த திரைப்படம் நிச்சயம் தமிழ் திரையுலகில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Here’s the #LaabamTrailer 😊https://t.co/q429UC6A2t@shrutihaasan #SPJhananathan #Laabam @immancomposer @ramji_ragebe1 @vsp_productions @7CsPvtPte @Aaru_Dir @KalaiActor @IamJagguBhai @yogeshdir @LahariMusic @proyuvraaj pic.twitter.com/lwIxHoi3zK— VijaySethupathi (@VijaySethuOffl) August 22, 2020