தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். முதலில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ்’காக்கா முட்டை’ திரைப்படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.
இதன் பின் ஆறாது சினம், தர்ம துரை, லட்சுமி, சாமி 2 , செக்க சிவந்த வானம், வட சென்னை, கனா எனப் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாகப் புகழ் பெற்றார்.
இதுவரை ஐஸ்வர்யா ராஜேஷ் 24 படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரின் 25வது படம் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு ‘பூமிகா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ரதீந்திர பிரசாத் இயக்க பிரித்வி சந்திர சேகர் இசையமைக்கிறார். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
Happy to release the Title motion poster of @aishu_dil ‘s 25th film Titled #Boomika A @karthiksubbaraj presentation and directed by @RathindranR https://t.co/GA2y0pCQ8J
Wishing the entire team the very best 😊👍@StonebenchFilms @kaarthekeyens— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 22, 2020