ஆகஸ்ட் 22 – நாடோடிமன்னன் வெளியான நாள் – பிலிம் நியூஸ் ஆனந்தன் மக்கள் தொடர்பாளராக அறிமுகமான படம் !
பிலிம் நியூஸ் ஆனந்தன் எனப்படும் பி. ஜி. அனந்த கிருஷ்ணன் தமிழ்த் திரைப்பட உலகின் தகவல் களஞ்சியம் என அழைக்கப்பட்டவர். இவர் சென்னையில் பிறந்தவர்.
ஆகஸ்ட் 22 1958 ஆம் ஆண்டு வெளிவந்த படம் நாடோடிமன்னன் .எம். ஜி. ராமச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், எம். என். நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் திரைப்பட மக்கள் தொடர்பாளராக எம்.ஜி.ஆர் மூலமாக அறிமுகம் செய்யப்பட்ட பிலிம் நியூஸ் ஆனந்தன், அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,500 படங்களுக்கு மேல் பி.ஆர்.ஓ ஆகப் பணியாற்றி இருக்கிறார்.
திரைப்படத் துறையில் மக்கள் தொடர்புப் பணியில் இருந்த ஆனந்தன் தமிழ்த் திரைப்பட நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என அனைத்துத் திரைப்படத் துறையினர் குறித்த தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தார்.
தமிழக அரசின் கலைமாமணி விருது, 1991 இல் பெற்றவர் . சென்னையில் பல ஆண்டுகளாக “ஃபிலிம் நியூஸ்” என்ற திரைப்படச் செய்தி நிறுவனத்தை நடத்தி வந்தார். இவரிடமிருந்த தமிழ்த்திரைப்பட செய்திக் கோப்புகளையும் ஆவணங்களையும் தொகுத்து நூலாக வெளியிட தமிழ்நாடு அரசு நிதியுதவி செய்தது. “சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு” என்ற பெயரில் இந்நூல் வெளியிடப்பட்டது