தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர் என பன்முக திறமை உடையவர் பிரேம்ஜி. இவர் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரர் ஆவார்.
சென்னை 600028 , கோவா, மங்காத்தா, மாஸ் என பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். மேலும் ஞாபகம் வருதே, துணிச்சல், தோழா என பத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
அதில் ஒரு படம் ஜெய் நடித்த “அதே நேரம் அதே இடம்” . இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நான்கு வருடங்கள் ஆகிறது. இருப்பினும் இத்திரைப்படத்தின் பாடல்கள் தற்போது வரை ரசிகர்களால் ரசித்துக் கேட்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள “அது ஒரு காலம், அழகிய காலம்” பாடல் நான்கு வருடங்களுக்குப் பிறகு யூடியூப்பில் 10மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
இந்தப் பாடல் வரிகளை லலிதா ஆனந்த் எழுதியுள்ளார். மேலும் பிரேம்ஜி இசையமைத்துப் பாடி இருந்தார். பிரேம்ஜி உடன் இணைந்து ஹரிசரண் இணைந்து பாடி இருந்தார்.
தற்போது 10 மில்லியன் பார்வைகளைக் கடந்த மகிழ்ச்சியில் பிரேம்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் “என்னுடைய முதல் 10 மில்லியன் பார்வைகளைப் பெற்ற பாடல், அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
My first ever song to reach 10 million views 🙏 one of my fav compositions 🙏 thanks to all 🙏 https://t.co/WExLPnX0hy
— PREMGI (@Premgiamaren) August 20, 2020