எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் “பொம்மை” படத்தின் பின்னணி இசை பணிகளை முடித்துள்ளார் யுவன்.
மான்ஸ்டர் படத்தின் மெகா ஹிட் வெற்றியை தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே,சூர்யா மற்றும் பிரியா பவானி ஷங்கர் இணைந்து ராதாமோகன் இயக்கத்தில் “பொம்மை” படத்தில் நடித்துள்ளனர். சாந்தினி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கிற்கு முன் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் இப்படத்தின் பின்னணி இசைப் பணிகளை யுவன் ஷங்கர் ராஜா முடித்துள்ளதாக நடிகர் எஸ் ஜே சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி ட்வீட் தெரிவித்துள்ளார்.
‘பின்னணி இசையின் அரசன் என சொல்லப்படும் யுவன் பொம்மை படத்தின் பின்னணி இசைப் பணிகளை விரைந்து முடித்துள்ளார். அவரது இசை படத்திற்கு மேலும் கூடுதல் சிறப்புகளை கூட்டியுள்ளது. விரைவில் உங்களை (ரசிகர்களை) பாடல்கள் மற்றும் டிரைலரோடு சந்திக்கிறோம்’ என கூறியுள்ளார்,
The king of back ground score , young maestro @thisisysr sir finished the BGM of “BOMMAI” . U1 music added a great value to @Radhamohan_Dir ‘s awesome scenes of this romantic thriller(starring me and @priya_Bshankar) Final mix going on . soon will meet u all with songs & trailer— S J Suryah (@iam_SJSuryah) August 19, 2020