யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் மட்டுமன்றி அவ்வப்போது சில திரைப் படங்களையும் தயாரித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா ஒரு திரைப்படத்தை ஓடிடி பிளாட்பாரத்திற்காக தயாரிக்கவுள்ளார். இந்த படம் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சம் கொண்டது என்றும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் ப்ரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை ‘ஒரு நாள் கூத்து’ என்ற படத்தை இயக்கிய நெல்சன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.