அல்லு அர்ஜூன் நடிப்பில் 2020 பொங்கல் அன்று வெளிவந்த ‘அலாவை குந்தபுரம்லே’ ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி பெற்றது. உலகம் முழுவதும் 220 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.
‘அலாவை குந்தபுரம்லே’ படத்தில் இடம்பெற்ற “புட்ட பொம்மா” தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி பிறமொழி ரசிகர்களையும் கவர்ந்தது. யூ டியூபில் தற்போது வரை இப்பாடல் 330 மில்லியன் பார்வைகளைப் கடந்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் இன்னொரு பாடலான ” ராமலு ராமலா” பாடலின் வீடியோ தற்போது வரை 300 மில்லியன் பார்வைகளை கடந்தும் சென்றுக் கொண்டிருக்கிறது.
இதனை இசையமைப்பாளர் தமன் தன்னுடைய ட்விட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார். அதில் ” முதன் முறையாக ஒரு தென்னிந்தியப் பாடலின் வீடியோ இந்த இடத்தை அடைந்துள்ளது. அல்லு அர்ஜுன் மற்றும் திரிவிக்ரம் அவர்களின் ஒத்துழைப்பினால் தான் இது சாத்தியமானது ” என குறிப்பிட்டுள்ளார்.