வி.வி என்பவர் இயக்கத்தில் ஆர்யன் ஷாம் நடிக்கும் படம் ‘அந்த நாள்’. ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் வழங்க R. ரகுநந்தன் கிரீன் மேஜிக் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கின்றனர். N. S. ராபர்ட் சற்குணம் என்பவர் படத்திற்கு இசையமைக்கிறார். சதீஷ் கதிர்வேல் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தில் ஆர்யன் ஷாம் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
விரைவில் வெளிவரவிருக்கும் அந்த நாள் படத்தில் ஆர்யன் ஷாம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஆத்யா, லீமா பாபு, “நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்” புகழ் ராஜ்குமார், கைதி பட புகழ் கிஷோர், இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்திருக்கிறார்.