‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்து 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி வெளிவந்த திரைப்படம் “தர்மதுரை”.
சீனு ராமசாமி இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில், கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், ஸ்டூடியோ 9 சார்பில் ஆர்.கே.சுரேஷ் படத்தை தயாரித்திருந்தார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார், கஞ்சா கருப்பு, ராஜேஷ் என பலர் நடித்திருந்தனர்.
தர்மதுரை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல விருதுகளையும், வசூலையும் வாரி குவித்தது.
இன்றுடன் “தர்மதுரை” திரைப்படம் வெளிவந்து 4 ஆண்டுகள் ஆன நிலையில் ரசிகர்கள் #4YearsofDharmadurai என்ற ஹேஷ்டேகின் மூலம் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.