V4UMEDIA
HomeNewsKollywood"மெமரீஸ்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஷால் !

“மெமரீஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஷால் !

வெற்றி ஹீரோவாக நடித்த எட்டு தோட்டாக்கள், ஜீவி ஆகிய இரண்டு படங்களும் அவருடைய சிறப்பான நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்றது.

இந்நிலையில் வனம், கேர் ஆஃப் காதல், மெமரிஸ் போன்ற அவருடைய அடுத்த படங்கள் முந்தைய இரண்டு படங்களைப் போலவே வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இயக்குநர் ஷ்யாம் பிரவீன் இயக்கத்தில், ஆர்மோ மற்றும் கிரண் நூபிடல் ஒளிப்பதிவில், ஷான் லோகேஷ் எடிட்டிங்கில், பிரசன் இசையில், அஜயன் பாலா வசனத்தில் நடிகர் ‘வெற்றி’ முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படமான ‘மெமரீஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று விஷால் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தை சிஜுதாமீன் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.

பிரவீன் ஏற்கனவே 8 தோட்டாக்கள், ஜீவி உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Presenting, #MemoriesFirstLook starring #Vetri in the lead, Best wishes @PRO_Priya & the entire team….GB pic.twitter.com/zr2NTvhq0E— Vishal (@VishalKOfficial) August 18, 2020

Most Popular

Recent Comments