தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் “டாக்டர்”. டாக்டர் திரைப்படத்தை கே ஜே ஆர் நிறுவனம் சார்பில் ராஜேஷ் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
கடந்த மாதம் சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில், அனிருத் இசையமைத்து பாடிய “செல்லம்மா” பாடல் மிக வைரலாகி ஹிட் ஆனது. இந்தப் பாடலுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் நேற்று மாலை அடுத்த பாடலான ‘நெஞ்சமே’ பாடல் வெளியீடு பற்றிய அறிவிப்பைப் படக்குழுவினர் அறிவித்தனர்.
இந்தப் பாடல் வரும் வியாழன் அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது டிவிட்டர் பயன்படுத்தும் ரசிகர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளனர் படக்குழுவினர். மெர்சல், பிகில் படங்களின் வெளியீட்டின் போது அந்தப் படத்தின் பெயரை டிவிட்டரில் பதிவிட்டால் எமோஜி வரும்.
தற்போது டாக்டர் படத்தின் பிரபல பாடலான “செல்லம்மா” வார்த்தையை ஹேஸ் டேக்குடன் டிவிட்டரில் டைப் செய்தால் விதவிதமான பரிசுகள் மற்றும் ஸ்டிக்கர்கள் தோன்றுகின்றன. இதைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் டிவிட்டரில் இதைப் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
pic.twitter.com/4DdlGsxpFi— Sivakarthikeyan Productions (@SKProdOffl) August 18, 2020















