V4UMEDIA
HomeNewsKollywood"எழுந்து வந்துருடா பாலு" ! பாரதிராஜா உருக்கமான வீடியோ !

“எழுந்து வந்துருடா பாலு” ! பாரதிராஜா உருக்கமான வீடியோ !

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் கடந்த வாரம் தீவிர சிகிச்சையில் இருந்தார். தற்போது உடல்நிலை சீராக நலம் பெற்று வருவதாக அவரது மகன் சரண் கூறியுள்ளார். #SPB #PrayforSPB #SPbalasubramanyam என சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் நண்பரும் பிரபல இயக்குனருமான பாரதிராஜா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்

“பாலு நான் மட்டுமில்லடா, உலகத்தில் உள்ள அத்தனை கலைஞர்களும் கண்ணீர் விட்டுருக்கிறோம். நான் விட்ட கண்ணீர், என் கன்னங்களில் வழியும் போது, அதை துடைத்து துடைத்து எறிந்துக் கொண்டு இருக்கிறேன்.

Bharathiraja breaks down in tears while praying for SPB | Tamil ...

இப்போது கூட இந்த பதிவில், அது வந்துவிடக் கூடாது என நான் நிதானமாக பேச முயற்சிக்கிறேன். பாலு வந்திருடா ! நான் வணங்குகின்ற பஞ்ச பூதங்கள் நிலம், நீர், காற்று, வின், வெளி அத்தனையும் உண்மை என்றால், நீ மறுபடியும் வருகிறாய். எங்களோடு பழகுகிறாய். இன்னும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடுகிறாய். நீ ஒரு ஆண் குயில். வந்திருடா பாலு!… ” என உருக்கமாக பேசியுள்ளார்.

Get Well Soon For #SPBalasubramanyam pic.twitter.com/zO0bRU1Wze— Bharathiraja (@offBharathiraja) August 18, 2020

Most Popular

Recent Comments