V4UMEDIA
HomeNewsKollywoodSPB விரைவில் குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன் - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

SPB விரைவில் குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன் – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளார். #SPB #PrayforSPB #SPbalasubramanyam என சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனை தொடர்ந்து, எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவி சாவித்ரிக்கும் கொரோனா தொற்று உறுதியானது. கொரோனாவால் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஐ.சி.யூ.வில் தீவிர சிகிச்சையில் உள்ள நிலையில் அவரது மனைவிக்கும் தொற்று உறுதியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உடல்நிலை சீராக நலம் பெற்று வருவதாக அவரது மகன் சரண் கூறியுள்ளார்.


Rajinikanth's Kabali: Will fans be kind to a non-SP ...


இந்நிலையில், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் நண்பரும் பிரபல நடிகருமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்

“இந்தியா மொழிகள் பலவற்றிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் சார் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அபாயக்கட்டத்தை தாண்டியுள்ளார். அவர் சிகிச்சை முடிந்து பூரண நலமுடன் திரும்ப எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்” என உருக்கமாக பேசியுள்ளார்.

Get well soon dear Balu sir pic.twitter.com/6Gxmo0tVgS— Rajinikanth (@rajinikanth) August 17, 2020

Most Popular

Recent Comments