செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7G ரெயின்போ காலனி , யாரடி நீ மோகினி , மயக்கம் என்ன, ஆயரத்தில் ஒருவன் என அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அறிமுக இயக்குனர் அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக இணைந்து நடிக்கவுள்ள புதிய படத்திற்கு ‘சாணிக் காயிதம்’ என பெயரிட்டுள்ளனர்.
ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு யாமினி யாகன மூர்த்தி ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இந்த நிலையில் பிரபல நடிகரும் செல்வராகவன் தம்பியும் ஆன தனுஷ் வாழ்த்து தெரிவித்து படத்தினை பாராட்டி வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார். அதில்
” நான் பார்த்த உங்கள் நடிப்பின் ஆற்றலை உலகமும் பார்க்கட்டும் செல்வா சார்’ எனக் கூறியுள்ளார்.