V4UMEDIA
HomeNewsKollywood"சாணிக் காயிதம்" சாமானியனின் போர்க்களமாக இருக்கப் போவது நிதர்சனம் ! பாரதிராஜா பாராட்டு

“சாணிக் காயிதம்” சாமானியனின் போர்க்களமாக இருக்கப் போவது நிதர்சனம் ! பாரதிராஜா பாராட்டு

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன். இவரது படைப்புகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரது இயக்கத்தில் வெளிவந்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7G ரெயின்போ காலனி , யாரடி நீ மோகினி , மயக்கம் என்ன, ஆயரத்தில் ஒருவன் என அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இயக்குனர் செல்வராகவன் தற்போது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். அறிமுக இயக்குனர் அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக இணைந்து நடிக்கவுள்ள புதிய படத்திற்கு ‘சாணிக் காயிதம்’ என பெயரிட்டுள்ளனர்.


ஹீரோவாக களமிறங்கும் இயக்குனர் ...


ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு யாமினி யாகன மூர்த்தி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். மேலும், இப்படத்தின் மிரட்டலான ப்ரஸ்ட் லுக் இன்று வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் இப்படம் தற்போதே மிக பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா படத்தினை பாராட்டி வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார். அதில்

” ராக்கி தமிழ் சினிமாவில் ஒரு western movie.
திரைக்கு வருமுன்
இளம் படைப்பாளி
அருண் மாதேஷ்வரனின்
அடுத்த படைப்பு
சாணிக் காயிதம்
சாமானியனின்
போர்க்களமாக
இருக்கப் போவது
நிதர்சனம்.
வாழ்த்துக்கள்
அன்புடன்
பாரதிராஜா ” என தெரிவித்துள்ளார்.

India Today Showbiz's tweet - "#SaaniKayidham first look out ...

Most Popular

Recent Comments