V4UMEDIA
HomeNewsKollywood20 மில்லியன் பார்வையாளர்களை கடந்த சூரரை போற்று பாடல் - வெய்யோன் சில்லி

20 மில்லியன் பார்வையாளர்களை கடந்த சூரரை போற்று பாடல் – வெய்யோன் சில்லி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது “சூரரை போற்று”. 


இந்த படம் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சுதா கோங்குரா இயக்கியுள்ளார். சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரிப் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். 2டி என்டேர்டைன்மெண்ட் சார்பில் ராஜசேகர பாண்டியன் தயாரித்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார்.



இப்படத்தின் டீஸர் மற்றும் டிரைலர் ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இப்படத்தின் பாடல்களை சென்னை விமான நிலையத்தில் வெளியிட்டனர். இந்நிலையில் “வெய்யோன் சில்லி” பாடல் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

Most Popular

Recent Comments