V4UMEDIA
HomeNewsKollywoodசித் ஸ்ரீராம் குரலில் விரைவில் வெளிவரும் 'முருங்கைகாய் சிப்ஸ்' படத்தின் பாடல் !

சித் ஸ்ரீராம் குரலில் விரைவில் வெளிவரும் ‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் பாடல் !

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர் சாந்தனு. சிம்புதேவன் இயக்கி வரும் ‘கசடதபற’ மற்றும் விக்ரம் சுகுமாறன் இயக்கி வரும் ‘ராவண கூட்டம்’ என 2 படங்களில் நடித்து வருகிறார். தற்போது பாக்யராஜூடன் அவரது மகன் சாந்தனு இணையும் திரைப்படம் ‘முருங்கைக்காய்’ .

சாந்தனுவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். இப்படத்தை ஸ்ரீஜார் என்பவர் இயக்குகிறார். முக்கிய வேடத்தில் கே.பாக்யராஜ் நடிக்கவுள்ளார். மேலும் மனோபாலா, மதுமிதா, யோகி பாபு, ரேஷ்மா என பலர் நடிக்க உள்ளனர்.




தரண் குமார் இசையமைக்க மேஷ் ஒளிப்பதிவில் உருவாகவுள்ள இப்படத்தை லிப்ரா ப்ரோடுக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கிறார். லாக்-டவுன் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Love this melody #edhosolla ❤️ @dharankumar_c 😍 this song is amazing ! Thank you @sidsriram sir for accepting our song and your voice is magic ! Lyrical video from #august17 💃 @imKBRshanthnu @SonyMusicSouth @LIBRAProduc @Srijar1 pic.twitter.com/9UELcMyMPK— Athulyaa Ravi (@AthulyaOfficial) August 14, 2020


இந்த நிலையில் ” கட்டி வெல்லத்தையே ஒடச்சு கொஞ்சமாக கடிச்சு பேச்சுல கரச்சிடுவா” என்ற பாடலின் ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். மேலும் முழுப்பாடல் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

Recent Comments