V4UMEDIA
HomeNewsMollywoodஅந்த படத்தில் நடிக்க மாட்டேன் ! கறாராக கூறிய நயன்தாரா

அந்த படத்தில் நடிக்க மாட்டேன் ! கறாராக கூறிய நயன்தாரா

நடிகை நயன்தாரா அந்தாதூன் திரைப்படத்தில் நடிக்க மறுத்தது ஏன் என செய்தி வெளியாகியுள்ளது.

2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரபல இந்தி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளிவந்த அந்தாதூன் திரைப்படம் இந்தியாளவில் மட்டுமின்றி உலக அளவில் மிக பெரிய கவனம் ஈர்த்தது. இதனை தொடர்ந்து அந்த படத்தை இந்தியாவின் மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய மிகப்பெரிய போட்டி நிலவ, தமிழ் பதிப்பை தியாகராஜன் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றினார்.


Image


இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை தபு நடித்திருந்தார். கதாநாயகனுக்கு இணையான வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்த தபுவின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

Image
இந்நிலையில் தெலுங்கில் இந்த படத்தின் ரீமேக்கில் தபுவின் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நயன்தாராவிடம் கேட்டுள்ளனர். அதற்காக பெருந்தொகை ஒன்றையும் சம்பளமாக தர முன் வந்துள்ளது தயாரிப்பு தரப்பு. ஆனால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா மறுத்து விட்டாராம். இது ஒரு வில்லி கதாபாத்திரம் என்பதால் நயன்தாரா நடிக்க மறுத்ததாக கூறப்பட்டது. ஆனால், தற்போது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் புதிய காரணம் ஒன்று கூறப்படுகிறது.

அதாவது தனக்கு நல்ல இமேஜ் இருப்பதால் திருமணத்தை மீறி தகாத உறவில் ஈடுபடும் சர்ச்சை கதாபாத்திரம் என்பதால் நயன்தாரா தனது பெயருக்கு டேமேஜ் ஏற்படும் என கூறி நடிக்க மறுத்து விட்டதாக தெலுங்கு மீடியாகள் தகவல் பரவி வருகிறது.

Most Popular

Recent Comments