கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள “குட் லக் சகி” படத்தின் டீசர் இன்று காலை வெளியானது.
நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள படம் குட் லக் சகி.
விளையாட்டு, காதல், நகைச்சுவை என பக்க கமெற்சியால் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆதி, ஜகபதி பாபு நடித்துள்ளனர்.
கீர்த்தி சுரேஷ் துப்பாக்கிச் சூடு வீராங்கனையாக நடிக்கிறார். கிராமத்தில் உள்ள அப்பாவி பெண் எப்படி இந்தியாவின் மிக பெரிய போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்கிறார் என்பதே படத்தின் ஒன்-லைன் கதை. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டீஸர் வெளிவந்து சில மணி நேரங்களில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
Sakhi has arrived! ❤️
Here comes the teaser for ̷B̷a̷d̷ Good Luck Sakhi ! ❤️😊
Wishing you all a very #HappyIndependenceDay! 🇮🇳
Tamil – https://t.co/qMMmIyF9Kt
Malayalam – https://t.co/H6elVuMTm3
Telugu – https://t.co/oBoCRceIda#GoodLuckSakhi #GoodLuckSakhiTeaser— Keerthy Suresh (@KeerthyOfficial) August 15, 2020