தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு. இவரது கால்ஷீட்டை வாங்குவது தான் இன்றைக்கு மிகவும் கடினம். தான் கஷ்டப்பட்டு உழைத்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசத்துக்கு கூட போக நேரம் இல்லாமல் பிஸியாக நடித்து கொண்டிருப்பார். தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து வருகிறார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு கூட எனக்கும் ‘தெளலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என ட்வீட் செய்திருந்த நிலையில் நடிகர் யோகி பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.
அதில் “தயவுசெய்து நான் ஒன்று அல்லது இரண்டு காட்சிகளில் நடித்த படங்களை நான் ஹீரோவாக நடித்தது போல் விளம்பரம் செய்யாதீர்கள். நான் எவ்வளவு காட்சிகளில் நடித்திருக்கிறேன் என்பதை கூறி விளம்பரம் செய்யுங்கள். குறிப்பாக ‘தெளலத்’ படத்தில் நான் ஓரிரு காட்சிகளில் மட்டுமே நடித்து உள்ளேன். ஆனால் நான்தான் ஹீரோ என்பது போல் அதில் சோலோ போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த படத்தின் உண்மையான ஹீரோ சிவன்
தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு என் பணிவான வேண்டுகோள். pic.twitter.com/PpxpcLscrY— Yogi Babu (@iYogiBabu) August 14, 2020
இவ்வாறு நான் ஓரிரு காட்சிகள் நடித்த திரைப்படங்களை ஹீரோவாக நடித்தது போல் விளம்பரம் செய்வதால் நான் உண்மையாகவே ஹீரோவாக நடித்து வரும் படங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே தயாரிப்பாளர், வினியோகஸ்தர், ரசிகர்கள் பலர் எனக்கு போன் செய்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர். சிலர் நான் தான் படத்தின் ஹீரோ என்று போஸ்டர் பார்த்து நினைத்து திரையரங்கு சென்று ஏமாந்து வருகிறார்கள். எனவே இப்படியெல்லாம் தயவு செய்து ரசிகர்களை ஏமாற்ற வேண்டாம்” என யோகிபாபு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.