V4UMEDIA
HomeNewsநிஹாரிகா - சைதன்யா திருமண நிச்சயதார்த்தம் இனிதே முடிந்தது !

நிஹாரிகா – சைதன்யா திருமண நிச்சயதார்த்தம் இனிதே முடிந்தது !

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் நடிகர் நாகேந்திர பாபுவின் மகள் நடிகை நிஹாரிகா கோனிடேலா. விஜய் சேதுபதி நடித்த ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நிஹாரிகா கோனிடேலா பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மருமகளும் கூட.

Image
Image

நிஹாரிவுக்காவுக்கு சைதன்யா ஜொன்னலகட்டா உடன் நேற்று ஹைதராபாத்தில் உள்ள ட்ரைடென்ட் ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கால் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நிஹாரிகா கொனிதேலாவின் நிச்சயதார்த்த விழாவில் மெகாஸ்டார் சிரஞ்சீவி, ராம் சரண், ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன், சாய் தரம் தேஜ், கல்யாண் தேவ் மற்றும் பஞ்சா வைஷ்ணவ் தேஜ் என பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து நிஹாரிகாவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Most Popular

Recent Comments