இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியான அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார் நடிகை நந்திதா ஸ்வேதா. அதன்பின் தளபதி விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார். விஜய் சேதுபதியுடன் நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” , எதிர்நீச்சல், முண்டாசுபட்டி என பல தரமான சிபிராஜ் நடிப்பில் உருவான கபடதாரி படத்திலும் நடித்துள்ளார் நந்திதா.
இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
ஐபிசி 376 என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது. இப்படத்தை ராம்குமார் சுப்பாராமன் இயக்கியுள்ளார். ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வருகிறது.
லாக்டவுனுக்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. சமீபத்தில் தான் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் முடிந்தது. இப்படத்தின் அங்காளி தாயே பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. இந்த பாடல் முழுக்க நந்திதா நடுரோட்டில் வெறித்தனமாக சாமி ஆடுகிறார்.