கார்த்திக் நரேன் துருவங்கள் படத்துடன் இயக்குனராக அறிமுகமானார், மேலும் அவரது இரண்டாவது திரைப்படமான மாஃபியா சமீபத்தில் வெளியிடப்பட்டது. இவரது இரண்டாவது படமாக இயக்கிய நரகாசூரன் இன்னும் வெளியிடப்படவில்லை. கார்த்திக் நரேன் அடுத்தவதாக தனுஷின் 43 வது திரைப்படத்தை இயக்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு கார்த்திக் நரேன் இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ளார். “அப்போது உங்கள் இயக்கத்தில் அறிவியல் வெப் சீரிஸ் வருமா ?” என்ற ரசிகரின் கேள்விக்கு, “ஒரு வெப் சீரிஸ் – விரைவில் வரும்” என இயக்குனர் கார்த்திக் நரேன் கூறியுள்ளார்.