பல பிரபலங்களும் “கிரீன் இந்தியா” சேலஞ்சில் மரக்கன்றுகளை நட்டு அந்தப் புகைப்படங்களைத் தங்களின் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் மகேஷ் பாபு, சில தினங்களுக்கு முன் தனது பிறந்த நாளை முன்னிட்டு இந்த சேலஞ்சில் மரக்கன்றுகளை நட்டு அந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த சவாலை ஜூனியர் என். டி. ஆர், தளபதி விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோரையும் செய்யுமாறு தன் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தளபதி விஜய் இந்த சவாலை ஏற்று செடி நட்டு அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிக வைரலாகி பரவியது. புகைப்படத்தின் ரீச் பார்த்து இந்தியா சினிமாவே ஆச்சரியப்பட்டது.
இந்த நிலையில் மகேஷ் பாபு வின் சவாலை ஏற்று நடிகை ஸ்ருதிஹாசன் அவரது வீட்டு தோட்டத்தில் செடி நட்டு அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோசன், ராணா டகுபதி, தமன்னா ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார்.