நடிகர் சூர்யா நடிப்பில் 2016ம் ஆண்டு உருவான “24” திரைப்படம் எந்த அறிவிப்புமின்றி அமேசான் ப்ரைமில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
24 படம் டைம் ட்ராவல் பற்றிய கதை. படம் வர்த்தக ரீதியாக பெரிய வெற்றி பெறவிட்டாலும் சூர்யாவின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

லாக்டவுன் சமயத்தில சூர்யா நடித்த 24 திரைப்படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. ஆனால் திடீரென அறிவிப்பு இன்றி நேற்று நீக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் என்னவென்றால் படம் அப்லோட் செய்யப்பட்டதில் இருந்து ஒலிப் பிரச்சனைகள் இருந்துள்ளன.
இது மட்டுமின்றி 24 என பெயர் இருப்பதால் தேடிக் கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனைகள் தீர்ந்த பின்னர் மீண்டும் அப்லோட் செய்யப்படும் என அமேசான் டீம் கூறியுள்ளது.