Home News Bollywood உடல் நலக்குறைவால் நடிகர் சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி !

உடல் நலக்குறைவால் நடிகர் சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி !

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் சஞ்சய் தத் தனது சிறை தண்டனையை முடித்த பின்னர் தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக கே ஜி எப் – பகுதி 2 படத்தில் வில்லனாக நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு அவரது போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்ககிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

Image

இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டு மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கொரோன ரேபிட் சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது.