தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் சிம்பு. இவருக்கு என்றே பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் ஆவார். அயோக்கியா, பொன்மகள் வந்தாள் போன்ற சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகர் சிம்பு மற்றும் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் 30 ஆண்டுகளாகவும், திரையுலகில் இருந்து வந்தாலும் இருவரும் இணைந்து இன்னும் ஒரு திரைப்படத்தில் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விரைவில் இருவரும் இணையவிருப்பதாகவும் இந்த படம் இடியுடன் கூடிய மழையாக இருக்கலாம் என நடிகர் இயக்குனர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.
பார்த்திபன் செய்துள்ள டுவீட்டில் –
” ‘சுயம்பு’ சிம்பு பற்றி பாராட்டு அவருக்கு எட்ட,உதவியாளர் பூங்கொத்தும் சாக்லெட்டுமாக வந்தார்.Mr Simbu நன்றியதில் Mr பண்பு ஆனார் எண்ணப்புத்தகத்தில்! “எனக்கே ஆச்சர்யமாயிருக்கு நாம ரெண்டு பேரும் சேந்து இன்னும் ஏன் workபண்ணலேன்னு”
அதாகப்பட்டது…. விரைவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்!!! ” என குறிப்பிட்டுள்ளார்.
பார்த்திபனும் சிம்புவும் இணைந்தால் அந்த படம் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும். ரசிகர்கள் ஆவலுடன் இக்கூட்டணி விரைவில் இணையும் என குஷியில் உள்ளனர்.