V4UMEDIA
HomeNewsKollywoodதனது பிறந்தநாள் பரிசாக ஒரு வான் நட்சத்திரத்தையே பெற்ற நடிகை ஹன்சிகா !

தனது பிறந்தநாள் பரிசாக ஒரு வான் நட்சத்திரத்தையே பெற்ற நடிகை ஹன்சிகா !

நடிகை ஹன்சிகா மோத்வானி இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். தனது பிறந்தநாள் பரிசாக ஒரு வான் நட்சத்திரத்தையே பெற்றுள்ளார். நட்சத்திர பதிவு சான்றிதழை ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்

Image

” நட்சத்திரங்களைப் பற்றி நான் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். சிறந்த குடும்பம் மற்றும் நண்பர்கள் மூலம் என் ஆசை நிறைவேறியுள்ளது. எனது பெயரிடப்பட்ட ஒரு நட்சத்திரத்தை விட சிறந்த பிறந்தநாள் பரிசு என் வாழ்நாளில் இருக்க முடியாது. இதற்கு எனது அற்புதமான மக்களுக்கு நன்றி ” என ஹன்சிகா தெரிவித்துள்ளார்.


Image


ஹன்சிகா மோத்வானி தனது 50 வது படமான ‘மகா’ படப்பிடிப்பை முடித்தவுடன் ‘பார்ட்னர்’ என்ற திரைப்படம் மற்றும் அமேசான் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்கவுள்ளார். ஹன்சிகா பிறந்தநாளை முன்னிட்டு மஹா படக்குழு பர்த்டே ஸ்பெஷல் போஸ்ட்டரை வெளியிட்டனர். ஹன்சிகாவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

You guys know how much i’m obsessed with stars ⭐️ so I am blessed with the best family and friends !! 🌌 Couldn’t have asked for a better birthday gift than have a star named after me 😍 thank you to my amazing people for this. #ANewStarIsBorn😉 pic.twitter.com/G4YHdsIsAb— Hansika (@ihansika) August 9, 2020

Most Popular

Recent Comments