பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து இந்திய சினிமாவில் பிரபலமான நடிகரனார் ராணா டகுபதி. கடந்த மாதம் தன் காதலி மிகீகா பஜாஜ் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அதிகாரப்பூர்வமாக இருவருக்கும் நிச்சயதார்த்தம் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.
மே 21 மிகீகா பஜாஜ் மற்றும் ராணா இருவரின் நிச்சயதார்த்தம் அவர்களது வீட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் ஊரடங்கு உத்தரவினால் சிம்பிளாக நடைபெற்றது.
தெலுங்கில் மிகப்பெரிய ஹீரோவாக வலம் வரும் ராணா, அவருடைய திருமண நிகழ்ச்சியை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். ஆகஸ்ட் 8ம் தேதி (நாளை) ராமநாயுடு ஸ்டுடியோஸில் ராணா – மஹீகா பஜாஜ் திருமணம் நடக்கவுள்ளது.
உறவினர்கள் 30 பேர் மட்டுமே கலந்துகொள்ளும் இத்திருமணத்தில் கோவிட் 19 பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவர் என ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது திருமண முன்னேற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில். திருமணத்துக்கு முந்தைய சடங்குகளில் மணமக்கள் எடுத்து கொண்ட அழகிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிக வைரலாகி வருகிறது.


























