ஹாலிவுட்டில் வெளியான லூத்தர் என்ற வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வெப் சீரியஸ் ஹிந்தியில் ரீமேக் செய்யப்போவதாகவும் அதில் அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
2010ம் ஆண்டு வெளியான லூத்தர் வெப் சீரிஸ் (பிபிசி ஒன்று) என்ற மிக பிரபலமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இதுவரை இந்த வெப் சீரிஸ் 5 சீசனாக எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகி உள்ளது.
ஹாலிவுட்டில் நடித்திருந்த நடிகர் இட் ரிஸ் என்பவருக்கு இந்த வெப்சைட் மூலம் பல விருதுகளும், உலகம் முழுவதும் பாராட்டுகளும் குவிந்தது. நல்ல வரவேற்பு பெற்ற இந்த வெப் சீரிஸ் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
இந்த ஹிந்தி ரீமேக் உரிமையை டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் நிறுவனம் சேர்ந்து தயாரிக்க உள்ளது. இத்தொடரில் அஜய் தேவ்கன் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.