V4UMEDIA
HomeNewsதனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மகேஷ் பாபு !

தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மகேஷ் பாபு !

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மக்கள் அவதிப்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், தனது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று அன்பு கட்டளை போட்டுள்ளார் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு. ஏற்கனவே தளபதி விஜய் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களை கேட்டு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சினிமா மற்றும் பல தொழில்கள் முடங்கி உள்ளன முக்கியமாக தினசரி தொழிலர்கள் கடும் வேதனையில் உள்ளனர்.

இந்நிலையில் “மகேஷ் பாபு” பிறந்தநாள் ஆகஸ்ட் 09 ஆம் தேதி வருகிறது. வருடாவருடம் அவரது ரசிகர்கள் மிகப்பிரம்மாண்டமாக மக்களுடன் மக்களாக கொண்டாடி மகிழ்வர். ஆனால் இம்முறை கொரோனா வைரஸ் தொற்று அச்சம் மக்களிடையே நிலவும் நிலையில், தனது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் நலத்திட்ட உதவிகள், செய்தித்தாள் வாழ்த்துகள் ஆகியவற்றை அளிப்பதைத் தவிர்த்து வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு அன்பு கட்டளை போட்டுள்ளார்.

A kind request to all my fans 🙏🏻 pic.twitter.com/UnAzeYPUBQ— Mahesh Babu (@urstrulyMahesh) August 7, 2020

Most Popular

Recent Comments