“ஓ மை கடவுளே” படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் லாக்கப் படத்தில் நடித்துள்ள வாணி போஜனுக்கு வரிசையாக சினிமா வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன.
ஆரம்ப காலத்தில் சீரியலில் நடிக்கும் நடிகைகளை சினிமாவில் நடிக்க வைக்க யோசிப்பார்கள் . அப்படியே நடித்தாலும் கதாநாயகி ரோல் தர மாட்டார்கள். அந்த பிம்பத்தை முதலில் உடைத்தவர் பிரியா பவானி சங்கர்.
அவருக்குப் பின் சின்னத்திரை நயன்தாரா என்று சீரியல் ரசிகர்களால் அழைக்கப்பட்டு மிக பிரபலமடைந்தவர் நடிகை வாணி போஜன். விமான பணிப் பெண்ணாக இருந்து பின்னர் மாடலிங் திரையில் நுழைந்தார்.
அதன் மூலம் சீரியல் நடிகையானார். சன் டிவியில் ஒளிபரப்பான ” தெய்வமகள் ” சீரியலில் நடித்து குறுகிய காலத்தில் குடும்ப ரசிகர்களிடையே படு பேமஸ் ஆகிவிட்டார். அதைத்தொடர்ந்து அசோக் செல்வன் நடித்த ‘ஓ மை கடவுளே’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.
இதனையடுத்து வாணி போஜன் நடித்துள்ள லாக்கப் படம் ஓடிடியில் ரிலிஸாகியுள்ளது. இதையடுத்து அவருக்கு இப்போது வரிசையாக சினிமா வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. சூர்யா தயாரிக்கும் இரு படங்களில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.