V4UMEDIA
HomeNewsKollywoodஇந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி!

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி!

கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி இந்தியன் – 2 படப்பிடிப்பு தளத்தில் ஏ‌ற்பட்ட கொடூர விபத்து தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளா‌க்கியது. சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். 


அதனைத் தொடர்ந்து திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றும் குமார் என்பவர் நரசதப்பேட்டை காவல்நிலையத்தில் லைகா நிறுவனம் மீது புகார் அளித்தார். அதில், தயாரிப்பு நிறுவனம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்றும், கிரேன் ஆபரேட்டர் அஜாக்கிரதையாக செயல்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனால் லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Image

இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவுத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், கமல் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த உதவி இயக்குனர் கிருஷ்ணா உள்ளிட்ட 3 பேரின் குடும்பத்துக்கு நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் சங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நிதியுதவி வழங்கியுள்னர். நடிகர் கமல்ஹாசன் ரூ.1 கோடியும், இயக்குநர் சங்கர் ரூ.1 கோடியும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ரூ.2 கோடியும் வழங்கப்பட்டது .

Most Popular

Recent Comments