V4UMEDIA
HomeNewsKollywood'நான் ஒரு ஏலியன்' ! மீண்டும் இண்டிபெண்டன்ட் ஆல்பமமுடன் களமிறங்கும் ஹிப்ஹாப் தமிழா !

‘நான் ஒரு ஏலியன்’ ! மீண்டும் இண்டிபெண்டன்ட் ஆல்பமமுடன் களமிறங்கும் ஹிப்ஹாப் தமிழா !

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் கால் பதித்து தற்போது நடிகராக வலம் வருகிறார் ஹிப் பாப் ஆதி. 2017ம் ஆண்டு வெளியான மீசைய முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் ஆதி. மீசைய முறுக்கு படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இசையமைப்பாளர், பாடலாசியர், ஆல்பம் ராப் சாங்ஸ் என தமிழ் சினிமாவில் பிஸியாக வலம் வரும் ஆதி சமூக பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொள்ளவர்.

Image

2012-ல் வெளிவந்த ஹிப்ஹாப் தமிழாவின் ‘ஹிப்ஹாப் தமிழன்’ ஆல்பம் மூலம் தமிழுலகத்திற்கு ‘ஹிப்ஹாப்’ எனும் புதிய வகை இசையை அறிமுகப்படுத்திய பெருமை Think Music-க்கு உண்டு. இந்தியாவின் முதல் தமிழ் ஹிப்ஹாப் ஆல்பம் அதுதான்.
திரையிசை கோலோச்சிய காலத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற சுதந்திர இசை ஆல்பமான ‘ஹிப்ஹாப் தமிழன்’ ஏற்படுத்திய அதிர்வுகள் இன்றும் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் ‘ஹிப்ஹாப்’ எனும் சொல், இசையின் ஒரு வகையாகக் கொள்வதைவிட ஒரு கலைஞரை குறிக்கக் கூடியதாகவே மாறிவிட்டது. சமகாலத்தில் உலகின் மிகப்பெரும் தமிழ் ராப்பிசைக் கலைஞராக திகழ்வதற்கு மேலாக, வெற்றிகரமான நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியராகவும் ‘ஹிப்ஹாப் தமிழா’ புகழ்பெற்றுள்ளார். வரும் சுதந்திர தினத்தன்று திரைப்படங்கள் சாராத சுதந்திர இசையுலகில் ‘நான் ஒரு ஏலியன்’ (Naa oru Alien) ஆல்பம் மூலமாக அவர் மீண்டும் களமிறங்குகிறார்.

Most Popular

Recent Comments